Advertisment

மோடி சொன்ன வரலாற்றில் இல்லாத மாற்றம் இதுதானா..?- வெகுண்டெழுந்த ராகுல்!!

rahul gandhi

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

வரலாறு காணாத பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை எதிர்த்தும்மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும்அகில இந்திய காங்கிரஸ் நாடு முழுவதும் ஒருநாள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. அதேபோல் பல இடதுசாரி அமைப்புகளும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

Advertisment

இந்நிலையில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் இந்த போராட்டம் நடந்து வருகிறது. முதலில் டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மலர்தூவினார்ராகுல்காந்தி. அதன் பின் ராஜ்காட்டில் இருந்து ராம்லீலா வரை காங்கிரஸ் கட்சியினர்பேரணியாக சென்று தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அதேபோல் நாட்டின் பல பகுதிகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டங்கள், பேரணிகள் நடத்தி தங்கள் எதிர்ப்பை காட்டிவருகின்றனர்.

இந்த பேரணிக்கு பிறகு போராட்டத்திற்கு தலைமை தாங்கிய ராகுல்காந்தி, பிரதமர் எல்லா பிரச்சனைகளுக்கும் மவுனம் ஒன்றை மட்டுமே பதிலாக வைத்துள்ளார். நாட்டில் பெட்ரோல் விலை அதிகரிப்பு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், விவசாயிகளின் அவலநிலை என எல்லா பிரச்சனைகளிலும் மோடி பதில் சொல்லாமல் மவுனம் காக்கிறார். மக்களுக்கு கொடுத்த எந்தவாக்குறுதிகளையும் மோடி அரசு நிறைவேற்ற வில்லை. 70 ஆண்டுகளில் இல்லாத ஒரு மாற்றத்தை கொண்டுவருவேன் என கூறிய மோடி அதை நிறைவேற்றி உள்ளார். அதாவதுவரலாற்றில் 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரூபாயின் மதிப்பை வீழ்ச்சிக்கு கொண்டுவந்துள்ளார்.இதுதான் அந்த மாற்றம்என பாஜகவின் ஆட்சியைகடுமையாக சாடினார் ராகுல்.

congress modi petrol protest Rahul gandhi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe