Skip to main content

லேண்டரில் இருந்து சிக்னல் வரவில்லை...இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சி! 

Published on 07/09/2019 | Edited on 07/09/2019

சந்திரயான்- 2 திட்டத்தின் முக்கிய நிகழ்வான, 'விக்ரம் லேண்டர்' நிலவின் தென் துருவ பகுதியில் 70 டிகிரி கோணத்தில் மான்ஸினஸ்- சிம்பிலியஸ்- எஸ் இடையே உள்ள பள்ளத்தாக்கில் மெதுவாக தரையிறங்குகிறது. லேண்டரை தரையிறக்கும் பணியை தொடங்கிய விஞ்ஞானிகள், சரியாக 15 நிமிடத்தில் நிலவில் இறங்குகிறது.இந்நிலையில் நிலவின் 400 மீட்டர் தொலைவில் கடைசி நிமிடத்தில் லேண்டரில் இருந்து சிக்னல் வரவில்லை. இருப்பினும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானிகள் சோகத்தில் உள்ளனர். சில விஞ்ஞானிகள் கண்ணீர் விட்டனர். 

chandrayaan 2 lender problem signal cut isro scientist shock pm narendra modi


இந்நிலையில் 'விக்ரம் லேண்டர்'  நிலவில் தரையிறங்குவதை பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரோ மையத்தில் நேரில் பார்வையிட்டு வந்த நிலையில், பிரதமர் மோடி இஸ்ரோ மையத்தில் இருந்து புறப்பட்டார்.  



 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆகஸ்ட் 23 தேசிய விண்வெளி தினமாக அறிவிப்பு

Published on 14/10/2023 | Edited on 14/10/2023

 

Announcement of August 23 as National Space Day

 

இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3, நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு கடந்த ஆகஸ்ட்  23 ஆம் தேதி மாலை நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது. இந்த சாதனை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி பெங்களூருவில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சந்திரயான் - 3 திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகளைச் சந்தித்துத் தனது பாராட்டுகளைத் தெரிவித்து அவர்களுடன் கலந்துரையாடினார். அதன் பின்பு பேசிய பிரதமர் மோடி, “சந்திரயான் - 3 திட்டத்தில் பெண்களின் பங்களிப்பும் முக்கியமாக உள்ளது. எனவே விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய இடம் சிவசக்தி என்று பெயரிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சக்தி என்பது பெண்களின் சக்தியையும் குறிக்கும். அதேபோன்று 2019 ஆம் ஆண்டு சந்திரயான் 2 நிலவில் தனது இடத்தைப் பதித்த இடம் திரங்கா (மூவர்ணக்கொடி) என அழைக்கப்படும். அதேபோல லேண்டர் தரையிறங்கிய ஆகஸ்ட் 23 ஆம் தேதி தினம் தேசிய விண்வெளி தினமாகவும் கொண்டாடப்பட இருக்கிறது” எனத் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி தேசிய விண்வெளி தினமாகக் கடைப்பிடிக்கப்படும் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நிலவில் சந்திரயான் 3 வெற்றிகரமாகத் தரையிறங்கியதைக் கொண்டாடும் விதமாகத் தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

Next Story

‘லேண்டர் - ரோவரில் இருந்து சிக்னல் பெற முடியவில்லை’ - இஸ்ரோ

Published on 22/09/2023 | Edited on 22/09/2023

 

Unable to receive signal from lander, rover ISRO

 

இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3, நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு கடந்த ஆகஸ்ட்  23 ஆம் தேதி மாலை நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது. இதனையடுத்து, நிலவில் தென் துருவத்தில் ஆய்வு தொடர்பான ரகசியங்களைத் தேடும் பணியை பிரக்யான் ரோவர் தொடங்கி நகர்ந்து வந்தது. ரோவரில் பொருத்தப்பட்டுள்ள கருவிகள், மண்ணில் உள்ள உலோகங்கள் பற்றிய விபரங்கள், அதன் தன்மையைப் பற்றியும் பரிசோதித்து வருவதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது. மேலும் பிரக்யான் ரோவர் நகர்ந்து சென்று ஆய்வுப் பணியை மேற்கொள்ளும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டிருந்தது. பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ரோவரின் செயல்பாடுகள் மற்றும் அது மேற்கொள்ளும் ஆய்வுகள் குறித்த தகவல்களைக் கண்காணித்து வந்தனர்.

 

அதே சமயம் நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் மூலம் தரையிறங்கிய பிரக்யான் ரோவர் 14 நாடகள் ஆய்வுப் பணிகளை வெற்றிகரமாக முடித்து பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு ஸ்லீப் முறைக்கு மாற்றப்பட்டது. மேலும் நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரின் செயல்பாடு நிறுத்தி வைக்கப்பட்டு உறக்க நிலைக்குச் சென்றுள்ளதாகவும் மேலும் விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் செப்டம்பர் 22 ஆம் தேதி மீண்டும் செயல்படத் தொடங்கும் என இஸ்ரோ தெரிவித்திருந்தது.

 

இந்நிலையில் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் செயல்பாடு குறித்து இஸ்ரோ தெரிவிக்கையில், “ஸ்லீப் முறையில் உள்ள விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரில் இருந்து எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை. ஸ்லீப் முறையில் உள்ள விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை இயக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” எனத் தெரிவித்துள்ளது.