Advertisment

2.1 கி.மீ.யில் 'லேண்டர்' தொடர்பு துண்டிப்பு.

சந்திரயான்- 2 திட்டத்தின் முக்கிய நிகழ்வான, 'விக்ரம் லேண்டர்' நிலவின் தென் துருவ பகுதியில் 70 டிகிரி கோணத்தில் மான்ஸினஸ்- சிம்பிலியஸ்- எஸ் இடையே உள்ள பள்ளத்தாக்கில் மெதுவாக தரையிறக்கும் போது 2.1 கி.மீ தொலைவில் இருந்த லேண்டர் தகவல் தொடர்பை இழந்தது என இஸ்ரோவின் தலைவர் சிவன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு. இருப்பினும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சந்திரயான்-2 விண்கலத்தில் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் தொடர்ந்து செயல்பட்டு நிலவின் பகுதியை ஆய்வு செய்யும்என்று இஸ்ரோ மையம் அறிவிப்பு.

Advertisment

chandrayaan 2 lander connection disconnect isro president sivan

இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய, பிரதமர் நரேந்திர மோடி தைரியமாக இருங்கள் என்று இஸ்ரோ மையத்தின் தலைவர் சிவனை தட்டிக்கொடுத்தார். மேலும் நம்பிக்கையுடன் இருங்கள் என்று விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் கூறினார். வாழ்கை என்றால் மேடு பள்ளங்கள் இருக்க தான் செய்யும் என்று கூறினார். பிறகு மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

ISRO SPACE CENTRE filled vickram lander CHANDRAYAAN 2 MISSION
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe