Skip to main content

2.1 கி.மீ.யில் 'லேண்டர்' தொடர்பு துண்டிப்பு.

Published on 07/09/2019 | Edited on 07/09/2019

சந்திரயான்- 2 திட்டத்தின் முக்கிய நிகழ்வான, 'விக்ரம் லேண்டர்' நிலவின் தென் துருவ பகுதியில் 70 டிகிரி கோணத்தில் மான்ஸினஸ்- சிம்பிலியஸ்- எஸ் இடையே உள்ள பள்ளத்தாக்கில் மெதுவாக தரையிறக்கும் போது 2.1 கி.மீ தொலைவில் இருந்த லேண்டர் தகவல் தொடர்பை இழந்தது என இஸ்ரோவின் தலைவர் சிவன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.  இருப்பினும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சந்திரயான்-2 விண்கலத்தில் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் தொடர்ந்து செயல்பட்டு நிலவின் பகுதியை ஆய்வு செய்யும் என்று இஸ்ரோ மையம் அறிவிப்பு.

chandrayaan 2 lander connection disconnect isro president sivan

இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய, பிரதமர் நரேந்திர மோடி தைரியமாக இருங்கள் என்று இஸ்ரோ மையத்தின் தலைவர் சிவனை தட்டிக்கொடுத்தார். மேலும் நம்பிக்கையுடன் இருங்கள் என்று விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் கூறினார். வாழ்கை என்றால் மேடு பள்ளங்கள் இருக்க தான் செய்யும் என்று கூறினார். பிறகு மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆகஸ்ட் 23 தேசிய விண்வெளி தினமாக அறிவிப்பு

Published on 14/10/2023 | Edited on 14/10/2023

 

Announcement of August 23 as National Space Day

 

இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3, நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு கடந்த ஆகஸ்ட்  23 ஆம் தேதி மாலை நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது. இந்த சாதனை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி பெங்களூருவில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சந்திரயான் - 3 திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகளைச் சந்தித்துத் தனது பாராட்டுகளைத் தெரிவித்து அவர்களுடன் கலந்துரையாடினார். அதன் பின்பு பேசிய பிரதமர் மோடி, “சந்திரயான் - 3 திட்டத்தில் பெண்களின் பங்களிப்பும் முக்கியமாக உள்ளது. எனவே விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய இடம் சிவசக்தி என்று பெயரிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சக்தி என்பது பெண்களின் சக்தியையும் குறிக்கும். அதேபோன்று 2019 ஆம் ஆண்டு சந்திரயான் 2 நிலவில் தனது இடத்தைப் பதித்த இடம் திரங்கா (மூவர்ணக்கொடி) என அழைக்கப்படும். அதேபோல லேண்டர் தரையிறங்கிய ஆகஸ்ட் 23 ஆம் தேதி தினம் தேசிய விண்வெளி தினமாகவும் கொண்டாடப்பட இருக்கிறது” எனத் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி தேசிய விண்வெளி தினமாகக் கடைப்பிடிக்கப்படும் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நிலவில் சந்திரயான் 3 வெற்றிகரமாகத் தரையிறங்கியதைக் கொண்டாடும் விதமாகத் தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

Next Story

செப்டம்பர் 2 இல் விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல் 1 விண்கலம்

Published on 28/08/2023 | Edited on 28/08/2023

 

The Aditya L1 spacecraft will launch on September 2

 

சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை இஸ்ரோ ஏவ உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3 நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு நிலவுக்கு மிக அருகில் சென்றதைத் தொடர்ந்து கடந்த 23 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது. இந்தியா முழுவதும் இந்த சாதனை கொண்டாடப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில், சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி காலை 11.50 மணிக்கு இஸ்ரோ விண்ணுக்கு அனுப்ப உள்ளது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் ஆதித்யா எல் 1 விண்கலம் ஏவப்பட உள்ளது. பி.எஸ்.எல்.வி. சி 57 ராக்கெட் இந்த விண்கலத்தை சுமந்து செல்ல உள்ளது.

 

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் 1 விண்கலம் ஆயிரத்து 475 கிலோ எடை கொண்டதாகும். பூமியில் இருந்து 1.5 மில்லியன் கி.மீ. தூரம் கொண்ட சூரியனின் லெக்ராஞ்சியன் புள்ளி 1 இல் நிலைநிறுத்தப்பட உள்ளது. மேலும் ஆதித்யா விண்கலத்தை நேரில் பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என இஸ்ரோ தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.