உலகம் முழுவதும் ஆராய்ச்சியாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த சந்திரயான் 2 திட்டத்தின் முக்கிய நிகழ்வான, 'விக்ரம் லேண்டர்' தரையிறங்கும் நிகழ்வின்போது 2.1 கி.மீ தொலைவில் தகவல் தொடர்பை இழந்தது.

Advertisment

chandrayaan 2 found argon 40 in moon

Advertisment

பின்னர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வேகமாக சென்று லேண்டர் நிலவின் தரையில் மோதியதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். விக்ரம் லேண்டர் தரையிறக்கம் தோல்வியடைந்தாலும், நிலவிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ஆர்பிட்டர் வெற்றிகரமாக ஆய்வு பணிகளை மேற்கொண்டது.

இந்த நிலையில், நிலவின் புறக்காற்று மண்டலத்தில் ஆர்கான் 40 வாயுவின் மூலக்கூறுகள் இருப்பதை ஆர்பிட்டரில் உள்ள சேஸ் 2 என்ற கருவி ஆய்வு மூலம் உறுதிப்படுத்தியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ரேடியோ அலைக்கற்றைகளை உருவாக்க பயன்படக் கூடிய இந்த வாயு பூமியில் மிக அரிதாகவே காணப்படும் ஒன்றாகும். தற்போது இந்த வாயு நிலவின் புறக்காற்று மண்டலத்தில் இருப்பதை ஆர்பிட்டர் கண்டறிந்துள்ளது.