su venkatesan

Advertisment

தெலங்கானா மாநிலத்தில்தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது, அக்கட்சியின் தலைவர்சந்திரசேகர ராவ், முதல்வராக இருந்து வருகிறார். கடைசியாக 2018ஆம் ஆண்டு டிசம்பரில் தெலங்கானாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில், அடுத்த சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ளது.

இந்தநிலையில்அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், ஆட்சியை முன்கூட்டியே கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த 2018ஆம் ஆண்டு சந்திரசேகர ராவ், 8 மாதங்களுக்கு முன்னதாகவேதனது ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்தித்தார் என்பதும், கடந்த பிப்ரவரி 1 ஆம்தேதி செய்தியாளர்களிடம் பேசிய சந்திரசேகரராவ், தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பாகவேவேட்பாளர் பட்டியலை வெளியிடுவேன் என தெரிவித்துள்ளதும்குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையியேசந்திரசேகர ராவ், ஆட்சியை முன்கூட்டியே கலைக்கப்போவதாகவெளியான தகவல்கள் வதந்தி என கூறி, எம்.எல்.ஏ.க்களை அதில் கவனம் செலுத்த வேண்டாம் எனஅறிவுறுத்தியுள்ளார்.