Chandrasekara Rao backs Yashwant Sinha

Advertisment

எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள யஷ்வந்த் சின்ஹாவுக்கு தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு நிறுத்தப்பட்டுள்ளார். காங்கிரஸ், தி.மு.க., திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், முன்னாள் மத்திய அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், கூட்டணியில் இல்லாத தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் தலைவரும், தெலங்கானா மாநில முதலமைச்சருமான சந்திரசேகர ராவ் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் திரௌபதி முர்முவுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான மாயாவதி ஆதரவு தெரிவித்துள்ளார்.