சிறப்பு அந்தஸ்து ஆந்திராவுக்கு அளிக்க வேண்டும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று டெல்லியிலுள்ள ஆந்திர பவனில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இதற்கு பல எதிர்க்கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். நேற்று மாலையே உண்ணாவிரத போராட்டத்தை தேவ கௌடா முடித்துவைத்தார்.
இந்நிலையில், இன்றும் தெலுங்குதேச கட்சியினரின் போராட்டம் தொடர்ந்தது. ஆந்திர பவனிலிருந்து ராஷ்ட்ரபதி பவன் வரை தெலுங்குதேச கட்சியினர் பேரணி நடத்திவருகின்றனர். மேலும் மம்தா பானர்ஜி, இன்று சந்திரபாபு நாயுடுவை டெல்லியில் சந்திக்க இருக்கிறார்.