Chandrababu Naidu's helicopter misses its way, causing excitement

இந்தாண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திராவில் 175 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கும், 25 மக்களவைத் தொகுதிக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அங்குள்ள அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளை தொடங்கி பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்தவகையில் ஆந்திரா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில் ஜனஜன சக்தி கட்சியுடன் கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு விசாகப்பட்டினத்தில் இருந்து அரக்கு என்ற பகுதியில் ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்க ஹெலிகாப்டரில் சென்றுள்ளார். அப்போது அவர் சென்ற ஹெலிகாப்டர் வழி தவறி வேறு பாதையில் சென்றுள்ளது. இதனை கவனித்த விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள், பைலட்டுக்கு எச்சரிக்கை செய்தனர்.

இந்த எச்சரிக்கையை அடுத்து ஹெலிகாப்டர் மீண்டும் விசாகப்பட்டினத்தில் இருந்து அரக்கு பகுதிக்கு சென்று பாதுகாப்பாக தரையிறங்கியது. ஏ.டி.சி.யுடன் ஒருங்கிணைப்பு இல்லாததால் வழி தவறி வேறு திசையில் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்திரபாபு நாயுடு பயணித்த ஹெலிகாப்டர் வழி தவறி வேறு பாதையில் சென்றதால் தெலுங்கு தேசம் கட்சியினர் மற்றும் மக்கள் மத்தியில் சிறிது நேரம் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.