Advertisment

ஆந்திர முன்னாள் முதல்வர்  சந்திரபாபு நாயுடுவுக்கு கரோனா உறுதி

chandrababu naidu

Advertisment

இந்தியாவில் தினமும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனாபாதிப்பு உறுதியாகி வருகிறது. மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கும் தற்போது கரோனா பாதிப்பு உறுதியாகி வருகிறது.

இந்த நிலையில்ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவுக்கு கரோனாபாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர், தனக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாகவும், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும்தெரிவித்துள்ளார்.

மேலும் சந்திரபாபு நாயுடு, தன்னிடம்தொடர்பில் இருந்தவர்களை விரைவாக கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறுகேட்டுக்கொண்டுள்ளார். ஆந்திராவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தற்போது கரோனாசிகிச்சையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Andhra
இதையும் படியுங்கள்
Subscribe