ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரிய அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அதற்காக கடந்த பல மாதங்களாக பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறார். இந்நிலையில் அதன் ஒரு பகுதியாக வரும் திங்கள்கிழமை ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரி டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். அதற்காக ஆந்திரா மாநிலத்திலிருந்து 20 பெட்டிகள் கொண்ட இரண்டு ரயில்களை முதல்வர் சந்திரபாபு நாயுடு வாடகைக்கு எடுத்துள்ளார். போராட்டத்தில் விருப்பம் உள்ளவர்கள் அந்த ரயில் மூலம் டெல்லி வரவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த ரயில் நாளை ஆந்திராவில் இருந்து டெல்லி புறப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்களை வாடகைக்கு எடுத்த சந்திரபாபு நாயுடு; பிரதமருக்கு எதிராக மாபெரும் போராட்டம்...
Advertisment