நாடு முழுவதும் இறுதிக்கட்ட மக்களவை தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, இன்று ராகுல் காந்தியை சந்தித்துள்ளார்.
டெல்லியில் உள்ள ராகுல் காந்தியின் இல்லத்தில் அவர் ராகுலை சந்தித்து பேசினார். கடந்த வாரத்தில், "தேர்தல் முடிவுக்கு பின்னர் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து நமது நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் (பிரதமர் பதவி) ஒருமித்த முடிவை எடுப்போம்" என தெரிவித்திருந்தார். மேலும் ராகுல் காந்தி சிறந்த தலைவர். அவர் மோடி போல இல்லாமல் நாட்டின் நலனில் அக்கறை காட்டுகிறார் என பேசியிருந்தார். இந்நிலையில் இவர்களின் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் ஒரு திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.