Skip to main content

மனைவிக்கு ஆதரவாக சந்திரபாபு நாயுடு சிறையில் உண்ணாவிரதப் போராட்டம்

Published on 03/10/2023 | Edited on 03/10/2023

 

Chandrababu Naidu on hunger strike in jail in support of his wife

 

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு 2014 ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில், திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ. 300 கோடிக்கு மேல் முறைகேடு செய்ததாகப் புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில், சந்திரபாபு நாயுடு வீட்டிற்குச் சென்ற மாநில சிஐடி காவல்துறையினர் அவரிடம் கைது செய்வதற்கான கைது வாரண்ட்டை வழங்கினர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு, நந்தியாலா பகுதியில் இருந்து விஜயவாடா சிறைக்கு கொண்டு செல்லப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 2021 ஆம் ஆண்டு பதிவான இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சந்திரபாபு நாயுடுவும் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

 

கடந்த 23 நாட்களாக சிறையில் இருக்கும் சந்திரபாபு நாயுடு, இந்த வழக்கு பொய் வழக்கு எனவும், தனக்கு ஜாமீன் வழங்க கோரியும் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை ரத்து செய்த நீதிமன்றம், அக்டோபர் ஐந்தாம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிட்டது. இந்த நிலையில், சந்திரபாபு நாயுடுவின் கைது நடவடிக்கையை கண்டித்து,  காந்தி ஜெயந்தி நாளான நேற்று (02-10-23)  சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி நேற்று ராஜமகேந்திரவரத்தில் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அவருடன், கட்சியின் மாநில மகளிர் அணி தலைவர், கட்சித் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். 

 

இதனை தொடர்ந்து, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் என ஆந்திரா மாநிலம் முழுவதும் உள்ள பல இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ‘சத்யமேவ ஜெயதே’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தனது மனைவிக்கு ஆதரவாக சந்திரபாபு நாயுடுவும் சிறையில் இருந்து கொண்டே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அதே போல், சந்திரபாபுவின் மகனும், கட்சியின் பொதுச் செயலாளருமான நாரா லோகேஷ் டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அலுவலகம்; ஆந்திராவில் பரபரப்பு

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
bulldozed YSR Congress office in Andhra Pradesh

ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தலில் ஆட்சியில் இருந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து தெலுங்கு தேசம் கூட்டணி அபார வெற்றி பெற்றிருந்தது. 175 தொகுதிகள் கொண்ட ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகளான ஜன சேனா கட்சி 21 இடங்களிலும், பா.ஜ.க 8 இடங்களிலும் வெற்றி பெற்றது. சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக கடந்த 12ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். இதன் மூலம், ஆந்திரப் பிரதேசத்தில் 4வது முறையாக சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்றுள்ளார்.

இதற்கிடையில், குண்டூர் மாவட்டம் தடேபள்ளியில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் கட்டப்பட்டு வந்தது. இந்த அலுவலகம் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து நோட்டீஸ் அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு எதிராக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அலுவலகத்தை இடிக்க தடை விதித்து உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று (22-06-24) காலை 5 மணி அளவில், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அலுவலகத்தை ராட்சத பொக்லைன் எந்திரங்களை கொண்டு இடித்தனர். இந்த நடவடிக்கைக்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜெகன் மோகன் ரெட்டி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, “ஆந்திராவில் அரசியல் கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் சந்திரபாபு தனது பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். கிட்டத்தட்ட ஒரு சர்வாதிகாரி புல்டோசர் மூலம் அழித்துள்ளார். இந்த ஐந்தாண்டு கால ஆட்சி எப்படி இருக்கப்போகிறது என்ற வன்முறை செய்தியை இந்தச் சம்பவத்தின் மூலம் கொடுத்துள்ளார். இந்த அச்சுறுத்தல்கள், இந்த வன்முறைச் செயல்கள் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் இல்லை. மக்களுக்காகக் கடுமையாகப் போராடுவோம். சந்திரபாபுவின் இச்செயல்களைக் கண்டிக்குமாறு நாட்டின் அனைத்து ஜனநாயகவாதிகளையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். 

Next Story

நிர்வாணமாக இளம்பெண்ணின் சடலம்; அதிர்ச்சி சம்பவத்தால் பரபரப்பு!

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
the shocking incident on corpse of a young woman in andhra pradesh

ஆந்திரப் பிரதேச மாநிலம், பாபட்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் இன்று அதிகாலை வீட்டை விட்டு வெளியே சென்று வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், அவரது குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். அப்போது, அப்பகுதியில் உள்ள பள்ளி அருகே முட்புதரில் நிர்வாண நிலையில் அப்பெண்ணின் உடல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த அப்பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

அந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகத்தின் பேரில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டை விட்டு வெளியே சென்ற இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.