சந்திரபாபு நாயுடுவின் 5 வயது பேரனின் சொத்து மதிப்பு இவ்வளவா..?

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திராபு நாயுடு அவர்களின் 5 வயது பேரனின் சொத்து மதிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. தெலுங்கு தேச கட்சியின் தலைவரான சந்திர பாபு நாயுடு ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய குடும்பத்தின் சொத்து மதிப்பினை வெளியிடுவார். அந்த வகையில் இந்த ஆண்டிற்காக சொத்து மதிப்பினை தற்போது வெளியிட்டுள்ளார். அதில் தன்னுடைய சொத்து மதிப்பாக 3 கோடியே 51 லட்சம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அவரது மகன் லோகேஷ்க்கு 19 கோடி சொத்துக்களும், அவரது மனைவி நாக பிராமணிக்கு 11 கோடியே 51 லட்சம் சொத்துக்களும், அவரது பேரன் தேவனாஸ்க்கு 19 கோடியே 42 லட்சம் மதிப்புடைய சொத்துக்களும் இருப்பதாக தெரிவித்துள்ளார். 5 வயதான அவரின் பேரனிடம் குடும்பத்தில் உள்ள அனைவரை காட்டிலும் அதிக அளவு சொத்துக்கள் இருக்கின்றது. இந்த சம்பவம் ஆந்திராவில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chandrababu Naidu
இதையும் படியுங்கள்
Subscribe