Advertisment

பாஜகவுக்கு எதிராக கூட்டணியை உருவாக்க இன்று இரண்டு முதல்வர்கள் சந்திப்பு...

chandrababu

பாஜகவுக்கு எதிராக ஒரு மாபெரும் கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு கட்சி தலைவர்களை சந்தித்து பேசிவருகிறார். சமீபத்தில் டில்லி சென்ற அவர் ராகுல், யெச்சூரி , முலாயம்சிங் உள்ளிட்டோரை சந்தித்து பேச்சு நடத்தினார். சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார்.

Advertisment

இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திப்பதற்காக இன்று கொல்கத்தா சென்றுள்ளார் சந்திரபாபு நாயுடு. விமான நிலையம் வந்தடைந்தவரை மேற்கு வங்க தலைவர்கள் வரவேற்றனர். சந்திரபாபு நாயுடு மாலை மேற்கு வங்க முதல்வர் மம்தாவை சந்திக்க இருக்கிறார்.

Advertisment

mamta banarji Chandrababu Naidu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe