/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_3292.jpg)
தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ், தனது டி.ஆர்.எஸ் கட்சியைக் கலைத்துவிட்டு 'பாரத ராஷ்ட்ரிய சமிதி' என்ற கட்சியை இன்று விஜயதசமி நாளில் தொடங்க உள்ளதாக கடந்த மாதம் இறுதியில் தகவல் வெளியாகியது. அதன்படி இன்று சந்திரசேகர ராவ், தனது டி.ஆர்.எஸ் கட்சியைக் கலைத்துவிட்டு 'பாரத ராஷ்ட்ரிய சமிதி' என்ற கட்சியை துவங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவரது கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் சந்திரசேகர் ராவ் தேசியக் கட்சி துவங்குவதைக் கொண்டாடும் விதமாக வாரங்கல் பகுதியில் டி.ஆர்.எஸ். கட்சியைச் சேர்ந்த அந்த நிர்வாகி, சந்திரசேகர் ராவ் மற்றும் அவரது மகன் கே.டி.ராமாராவ் ஆகியோரின் பேனர்களை வைத்து அதற்கு முன்பாக பொதுமக்களுக்கு இலவசமாக மது பாட்டிலும், கோழியையும் வழங்கினார்.
அப்போது அவர், சந்திரசேகர் ராவ் பிரதமர் பதவிக்கும் அவரது மகன் கே.டி.ராமா ராவ் தெலுங்கான முதல்வராகவும் ஆகவேண்டும் என்பதே தனது விருப்பம் எனத் தெரிவித்தார். அதேசமயம், இவர் மது பாட்டில்களை வழங்கியது பெரும் சர்ச்சையாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)