chandrababu naidu

கடந்த 2010 ஆம் ஆண்டு மஹாராஷ்ட்டிரத்திலுள்ள பாப்லி ஆற்றின் மீது மஹாராஷ்ட்டிரா அரசு அணை கட்ட முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த சந்திர பாபு நாயுடு மற்றும் அவருடன் சேர்ந்த முப்பதுக்கும் மேற்பட்டோர் அணையை முற்றுகையிட போவதாக அறிவித்திருந்தார்.

Advertisment

இதனையடுத்து, அப்பகுதியில் மஹாராஷ்ட்டிரா அரசு 144தடை உத்தரவு பிறப்பித்தது. அவ்வாறு இருந்தபோதிலும் சந்திரபாபு நாயுடு முற்றுகையிட்டு கைது செய்யப்பட்டார் பின்னர், ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Advertisment

இந்த வழக்கு துர்ஹமபாத் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிமன்றம் பல முறை சந்திரபாபு நாயுடு ஆஜராக சம்மன் அனுப்பியது. அவர் ஆஜராகாததால் சந்திரபாபு நாயுடு உள்பட 16 பேருக்கு நீதிபதி பிணையில்லா வாரண்ட்டை பிறப்பித்துள்ளார்.