Challenging Dawood Ibrahim... 25 lakhs if you give a clue!

Advertisment

தாவூத் இப்ராஹிம் குறித்து தகவல் கொடுத்தால் 25 லட்சம் சன்மானம் என என்.ஐ.ஏ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

1993 ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு சதிச்செயல்களுக்கு மூளையாக செயல்பட்டவன் தாவூத் இப்ராஹிம். தற்பொழுது வரை நிழல் உலக தாதா என்று கருதப்பட்டு தேடப்பட்டு வரும் நபராக உள்ள தாவூத் இப்ராஹிமை பிடிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் யார் கையிலும் சிக்காமல் சவால் விடுத்து வருகிறான் தாவூத் இப்ராஹிம். அண்மைக்காலமாக தாவூத் பாகிஸ்தானில் பதுங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய அரசின் விசாரணை அமைப்புகளால் தொடர்ந்து தேடப்பட்டு வரும் தாவூத் இப்ராஹிம் குறித்து தகவல் கொடுத்தால் 25 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் எனவும், தாவூத் இப்ராஹிம் மட்டுமல்லாது ஷகீல், சோட்டா ஷகீல் உள்ளிட்டோர் பற்றித் துப்பு கொடுத்தால் 20 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் எனவும் தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.