narendra modi

இந்தியாவில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத்தேர்தல் நடைபெறவுள்ளது. உத்தரப்பிரதேசத்தில்பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. மணிப்பூரில் பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3ஆம்தேதிகளில் சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

Advertisment

அதேபோல் உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா உள்ளிட்ட மூன்று மாநிலங்களிலும் பிப்ரவரி 14 ஆம் தேதி ஒரேகட்டமாகசட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர், நேற்று முன்தினம் இந்தத் தேர்தல் செய்திகளை அறிவித்தார். தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

Advertisment

இதனையடுத்துஉத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களிலும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நபர்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெறாமல் இருப்பதற்கான நடவடிக்கையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எடுத்துள்ளது.