/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/New Project (11)_6.jpg)
இந்தியாவில் கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தினசரி கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என தெரிவித்தார். மேலும் நாட்டில் 80 சதவீத புதிய கரோனாபாதிப்பு 90 மாவட்டங்களில் இருந்து பதிவாகிறது என தெரிவித்த அவர், 53 சதவீத பாதிப்புகள் மஹாராஷ்ட்ராமற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களிலிருந்தேபதிவாகிறது என கூறியுள்ளார்.
மேலும் லாவ் அகர்வால், "கரோனாவிலிருந்து மீள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கரோனாவிலிருந்து மீள்பவர்களின் சதவீதம் இன்று 97.3 ஆக இருக்கிறது. நாம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இங்கிலாந்து, ரஷ்யா, வங்கதேசத்தில் கரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது" என தெரிவித்துள்ளார்.
கேரளாவில் பரவும் ஸிகா வைரஸ் தொடர்பாக பதிலளித்தலாவ் அகர்வால், ஸிகா வைரஸ் பரவலை கண்காணிக்க மத்திய அரசு ஏற்கனவே 6 பேர் கொண்ட குழுவை அனுப்பியுள்ளதாகவும், குழுவில் சுகாதார நிபுணர்களும்வெக்டர்-போர்ன் (VECTOR-BORNE) நோய் நிபுணர்களும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் நிலைமை மத்திய அரசின் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)