/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kerala_35.jpg)
இந்தியாவிலேயேதற்போது அதிக கரோனாபாதிப்பு உள்ள மாநிலமாககேரளா இருந்துவருகிறது. இதனையடுத்துஅம்மாநிலத்தில் கரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைள் எடுக்கப்பட்டுவருகின்றன. கேரள அரசின் கரோனாதடுப்பு நடவடிக்கைகள்குறித்து ஆராய மத்திய அரசு குழு ஒன்றையும் அனுப்பியது.
இந்தநிலையில், இரண்டு டோஸ்தடுப்பூசியை செலுத்திக்கொண்டபிறகும் 40 ஆயிரம் பேருக்குக் கேரளாவில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு எதிர்ப்பு சக்தியை ஊடுருவும் புதிய மரபணு மாற்றமடைந்த வைரஸ் காரணமாக இருக்கலாம் எனவும் மத்திய குழு வட்டாரங்கள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. மேலும், அவ்வாறு புதிய மரபணு மாற்றமடைந்த வைரஸ் உருவாகியுள்ளதா எனகண்டறிய இரண்டு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டபிறகும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 40 ஆயிரம் பேருக்கும் மரபணு வரிசைமுறை சோதனை நடத்த மத்திய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் கூறியதாக தகவல்கள் தெரிவித்தன.
இந்தநிலையில், இந்த தகவல்களை மத்திய சுகாதாரத்துறை மறுத்துள்ளது. கேரளாவில் புதிய மரபணு மாற்றமடைந்தகரோனாவைரஸ் உருவாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக வெளியான செய்திகள் அடிப்படையற்றவைஎன்றும், முற்றிலும் தவறானவை எனவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)