Advertisment

கேரளா உள்ளிட்ட ஆறு மாநிலங்களுக்கு நிபுணர் குழுவை அனுப்பிய மத்திய அரசு!

kerala

Advertisment

இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்துவருகிறது. தினசரி கரோனாபாதிப்பு தற்போது 50 ஆயிரத்திற்கும் கீழாக குறைந்துள்ளது. அதேநேரத்தில்இந்தியாவில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் கரோனா பரவல் அதிகமாக இருந்துவருகிறது.

இந்தநிலையில், கரோனாபரவல் அதிகமாக இருந்துவரும்கேரளா, அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, ஒடிசா, சத்தீஸ்கர், மணிப்பூர் ஆகிய ஆறு மாநிலங்களுக்கு மத்திய அரசு, நிபுணர்கள் அடங்கிய குழுவை அனுப்பியுள்ளது. கரோனாவைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் மாநில அரசுகளுக்கு இந்தக் குழுக்கள் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

corona virus union government
இதையும் படியுங்கள்
Subscribe