supreme court

Advertisment

இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைப்பேசிகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டுக் கேட்கப்பட்டதாக பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ஃபிரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகள் விசாரணையில் இறங்கியுள்ளன. இந்திய உச்சநீதிமன்றத்திலும் இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று பெகாசஸ் தொடர்பான வழக்கில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த மத்திய அரசு, பெகாசஸ் விவகாரத்தை விசாரிக்க வல்லுநர் குழுவை அமைக்க தயார் எனத் தெரிவித்திருந்தது.

இந்தநிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு, தேசிய பாதுகாப்பு தொடர்பான காரணங்களால், இந்திய அரசு பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தியதா இல்லையா என்பதைப் பொதுவெளியிலோ அல்லது பிரமாண பாத்திரத்திலோ கூற முடியாது எனத் தெரிவித்தததோடு, உச்சநீதிமன்றம் குழு அமைத்தால், அந்த குழுவின் முன் பெகாசஸ் மென்பொருள் பயன்படுத்தப்பட்டதா இல்லையா என்பது குறித்த விவரங்களை சமர்ப்பிக்க தயார் எனவும் கூறியது.

Advertisment

இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையை 10 நாட்களுக்கு தள்ளிவைத்தது.