Advertisment

மூன்றாவது அலையை எதிர்கொள்ள மத்திய அரசு தயார் - மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர்!

anurag thakur

Advertisment

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர், தனது சொந்த மாநிலமானஇமாச்சல் பிரதேசத்தில்ஜன்ஆசீர்வாத் யாத்திரையில் கலந்துகொண்டுள்ளார். இந்தநிலையில், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், கரோனாமூன்றாவது அலையை எதிர்கொள்ள மத்திய அரசு தயாராகஇருப்பதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர், "சாத்தியமான கரோனாவைரஸின்மூன்றாவது அலையை எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளது. இதற்காக23,123 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது அலை, மற்றவர்களைவிட குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என அச்சம் தெரிவித்துள்ளதால், குழந்தைகள் பராமரிப்பை வலுப்படுத்த சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மக்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்துவதற்காக 35,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

மேலும், "கரோனாஇரண்டாவது அலை ஏற்பட்டபோது, அதிக அளவில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவைப்படும் என யாருக்கும் தெரியவில்லை. தற்போது நாட்டில் ஏகப்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளன" எனவும் அனுராக் தாக்குர் கூறியுள்ளார்.

anurag thakur corona virus
இதையும் படியுங்கள்
Subscribe