Advertisment

சென்னை-பெங்களூரு-மைசூரு இடையே அதிவேக ரயில் பாதை - விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்ய மத்திய அரசு முடிவு!

ashwini vaishnav

இந்திய நாடளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கி நடைப்பெற்று வருகிறது. இந்தநிலையில் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக பதிலளித்த மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், சென்னை-பெங்களூர்-மைசூருக்கு இடையே அதிவேக ரயில் பாதை அமைப்பதற்கான திட்ட அறிக்கையை தயார் செய்ய மத்திய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பதிலில் கூறப்பட்டுள்ளதாவது: டெல்லி-வாரணாசி, மும்பை-நாக்பூர், டெல்லி-அகமதாபாத், மும்பை-ஹைதராபாத், சென்னை-பெங்களூரு-மைசூரு, வாரணாசி-ஹவுரா மற்றும் டெல்லி-அமிர்தசரஸ் ஆகிய நகரங்களுக்கு இடையேஅதிவேக ரயில் பாதைகள் அமைப்பது குறித்து ஆய்வு செய்து விரிவான திட்ட அறிக்கைகளைத் தயாரிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவின் எழுத்துப்பூர்வ பதிலில் கூறப்பட்டுள்ளது.

Advertisment

Bangalore Chennai mysore
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe