Skip to main content

தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் மோடி படம் அச்சிடப்படுவது ஏன்? - மத்திய அரசு விளக்கம்!

Published on 11/08/2021 | Edited on 11/08/2021

 

narendra modi

 

இந்தியாவில் மக்களுக்குக் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுவரும் நிலையில், அவர்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெறுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்துவருகின்றன. பிரதமர் மோடியின் படத்தை இடம்பெறச் செய்வது சுய விளம்பரம் என்றும், அரசியல் நோக்கம் கொண்டது என்றும் அவர்கள் கூறிவருகின்றனர்.

 

இந்தநிலையில், கரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் அச்சிடப்படுவது அவசியமா, அது கட்டாயமா என மாநிலங்களவையில் கேள்வியெழுப்பப்பட்டது.

 

இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவின் பவார், "கரோனா பாதுகாப்பு நடத்தை, தொற்று நோய் பரவாமல் தடுக்கும் முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமரின் புகைப்படத்துடன் கூடிய அவரது செய்தி, தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னரும் கரோனா பாதுகாப்பு நடத்தையைப் பின்பற்றுவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான வலுவான செய்தியைத் தருகிறது" என கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்