Skip to main content

வெளிநாட்டு மாணவர்களின் தகவல்களைத் தர பல்கலைக்கழகங்களுக்கு மத்திய அரசு உத்தரவு!

Published on 01/09/2021 | Edited on 01/09/2021

 

union education minister

 

இந்தியா முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் இந்தியப் பல்கலைக்கழகங்களிலும், பல்கலைக்கழகங்களுக்குக் கீழுள்ள உயர்கல்வி நிறுவனங்களிலும் பயிலும் வெளிநாட்டு மாணவர்களின் விவரங்களைச் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் தர அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

 

மேலும் இதுவரை பல்கலைக்கழகங்களிலும், பல்கலைக்கழகங்களுக்குக் கீழுள்ள உயர்கல்வி நிறுவனங்களிலும் படித்த மாணவர்களின் விவரங்களையும் தருமாறும் மத்திய கல்வி அமைச்சகம் பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரியலூரில் பொங்கல் விழாவைக் கொண்டாடிய வெளிநாட்டினர்!

Published on 09/01/2023 | Edited on 09/01/2023

 

foreigners celebrated in pongal festival at  ariyalur district 

 

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் ரீடு தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் அன்பகத்தில் 14 வயதுக்கு மேற்பட்டோருக்கு தொழில் பயிற்சியுடன் கூடிய இல்லம் செயல்பட்டு வருகிறது. மேலும் இங்கு  சுமார் 30க்கும் மேற்பட்ட மன வளர்ச்சி குறைபாடு உடைய பெண்கள் தொழில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆண்டுதோறும் இந்த நிலையத்தில் பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம்.

 

இந்த ஆண்டு அமெரிக்காவில் வசிக்கக்கூடிய மருத்துவர் கேயன் வான் ராம்பே, ராபின், வேர்லி ஆகியோர் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் கொண்டாட அரியலூர் மாவட்டத்திற்கு வருகை தந்தனர். வந்திருந்த வெளிநாட்டினர் அனைவரும் தமிழரின் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சேலை அணிந்து ஆண்டிமடம் ரீடு தொண்டு நிறுவனத்திற்கு வருகை தந்து அங்கு பயிற்சி பெறும் பெண்களுடன் இணைந்து பொங்கல் விழாவில் கலந்து கொண்டு சிறப்பாகக் கொண்டாடினர். அங்கிருந்த மாற்றுத் திறனாளி பெண் குழந்தைகளுடன் கலந்து பேசி அவர்களுக்குப் பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

 

மேலும் அவர்கள் நமது தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து கும்மியடித்து செங்கரும்புடன் கூடிய பொங்கல் பானையில் பொங்கலிட்டு சூரியனுக்கு வழிபாடு செய்வதை நேரில் பார்வையிட்டு அதன் விளக்கத்தையும் கேட்டறிந்தனர். அவர்களும் சூரியனை வழிபட்டனர். அங்கிருந்த அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். பின்னர் அனைவரும் பொங்கல் உணவை ரசித்து உண்டு மகிழ்ந்தனர். தமிழர்களின் பாரம்பரிய விழாவில் தாங்களும் கலந்துகொண்டு பங்கேற்று சிறப்பித்தது தங்களுக்கு மகிழ்ச்சியாகவும்,  பெருமையாகவும் இருப்பதாகக் கூறினர்.

 

foreigners celebrated in pongal festival at  ariyalur district 

ரீடு தொண்டு நிறுவனத்தில் இருந்தவர்களும், "இவ்வாண்டு வெளிநாட்டினர் தங்களுடன் வந்து கலந்துகொண்டு பொங்கலைக் கொண்டாடியது மகிழ்ச்சியாகவும் புதிய அனுபவமாக இருப்பதாகவும்" கூறினர். வெளிநாட்டினர் நம் தமிழக மக்களுடன் கொண்டாடிய பொங்கல் விழா நிகழ்ச்சி ஆண்டிமடம் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

 

 

Next Story

அரசு பேருந்தின் பின்பக்க கம்பியை பிடித்துக்கொண்டு ஸ்கேட்டிங் பயணம்... வைரலாகும் வெளிநாட்டவர்

Published on 05/10/2022 | Edited on 05/10/2022

 

 Skating ride holding the back rail of a government bus... a viral foreigner

 


கோவையில் அரசு பேருந்தின் பின்பக்கத்தைப் பிடித்துக் கொண்டு வெளிநாட்டவர் ஒருவர் ஆபத்தான முறையில் ஸ்கேட்டிங்  வீலில் பயணிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

சமீப காலமாகவே பள்ளி மாணவர்கள் பேருந்தில் படிகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்வது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். இந்நிலையில் கோவையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் ஆபத்தை உணராமல் அரசு பேருந்தின் பின்புறத்தில் உள்ள ஏணியை பிடித்துக் கொண்டு ஸ்கேட்டிங் வீலில் பயணம் செய்துள்ளார். கோவை என்பது அதிகப்படியான வெளிநாட்டவர்கள் சுற்றுலா வரும் பகுதிகளில் ஒன்றாக இருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாவட்டம் என்பதாலும், மிக முக்கிய சுற்றுலாத் தளமான நீலகிரி கோவையை ஒட்டியுள்ளது என்பதாலும் கோவை விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டவர்கள் அங்கிருந்து  சுற்றுலா பயணங்களைத் தொடங்குகின்றனர்.

 

இந்நிலையில் கோவை விமான நிலையத்திற்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் வேறு பகுதிக்குச் செல்வதற்காக அரசு பேருந்தில் பின்புறம் உள்ள  ஏணி கம்பியைப் பிடித்துக் கொண்டு ஸ்கேட்டிங் வீலில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆபத்தை உணராமல் பயணித்துள்ளார். கோவையின் மிகப் பரபரப்பான சாலைகளில் ஒன்று அவினாசி சாலை. வாகனங்கள் அதிகம் செல்லக்கூடிய அச்சாலையில் வெளிநாட்டவர் இப்படி ஸ்கேட்டிங் வீலில் பயணித்த சம்பவம் தொடர்பாக வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.