Advertisment

"இந்த மாவட்டங்களில் 14 நாட்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும்" - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

lav agarwal

இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது தினசரி கரோனா பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் கீழ் வந்துள்ளது. இருப்பினும் கரோனாமூன்றாவது அலை வரும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சத்தின் இணை செயலாளர் இணை செயலாளர்லாவ் அகர்வால், நாட்டில் நிலவி வரும் கரோனா நிலை குறித்து விளக்கமளித்தார்.

Advertisment

அப்போது அவர், நாட்டில் 71 மாவட்டங்களில் கரோனாபாதிப்பு சதவீதம் 10க்கும் மேல் இருப்பதாக கூறியுள்ளார். தொடர்ந்து அவர், "வாராந்திர கரோனாஉறுதியாகும் சதவீதம் 10க்கும் அதிகமாக இருக்கும் மாவட்டங்களையும், 60 சதவீதத்திற்கும் மேல் படுக்கைகள் நிரம்பியுள்ள மாவட்டங்களையும் கண்டறிந்து, அம்மாவட்டங்களில் கரோனாபரவல் சங்கிலியை உடைக்க குறைந்தது 14 நாட்கள் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்குமாறுமத்திய அரசு மாநிலங்களைகேட்டுக்கொண்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

Advertisment

மேலும் லாவ் அகர்வால், இந்தியாவில் இதுவரை 34 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், இது உலகிலேயே அதிகமான எண்ணிக்கை எனவும்கூறியுள்ளார்.

corona virus union health ministry
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe