ஆதீனத்துக்கு தனி விமானம் ஏற்பாடு செய்த மத்திய அரசு

central vista opening ceremony thiruvavaduthurai adheenam reached delhi special flight

தற்போது செயல்பட்டு வரும் நாடாளுமன்றக் கட்டடம் 96 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் 1927 ஆம் வருடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானம், பாதுகாப்பு வசதிகள் குறைவு மற்றும் இட வசதி குறைவு காரணமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த நிலையில் புதிய கட்டடம் கட்டுவதற்கான திட்டத்திற்கு பிரதமர் மோடி கடந்த 2020 டிசம்பர் 10 ஆம் தேதி அடிக்கல் நாட்டினார்.கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் வருகிற மே 28-ம் தேதி சவார்க்கர் பிறந்த நாளன்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட உள்ளது. மேலும் நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவுக்கானபணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில்பிரதமர் மோடியே நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்து வைப்பார்.வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கச் செங்கோலை சபாநாயகர் இருக்கைக்கு அருகில் மோடி நிறுவுவார்.பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியர்களுக்கு அதிகாரம் மாற்றப்பட்டதைக் குறிக்கும் வகையில் இந்த செங்கோல் நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவிடம் ஒப்படைக்கப்பட்டது என்று கூறியிருந்தார்.

திருவாவடுதுறை ஆதீனம் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "1947 இல் சுதந்திரம் அடைந்த பிறகு ராஜாஜி, நேருஜி ஆகியோர் திருவாவடுதுறை ஆதீனத்தை தொடர்புகொண்டு செங்கோல் ஒன்றை கொடுக்கும்படி வேண்டிக் கேட்டுக் கொண்டனர். அந்த வேண்டுதலை ஏற்று திருவாவடுதுறை ஆதீனம் மூலம் 1947 ஆண்டு பண்டிதஜவஹர்லால் நேருவிற்கு தங்கச் செங்கோல் செய்து கொடுக்கப்பட்டது. இந்த செங்கோல் நீதி நெறி தவறாமல் நடக்க வேண்டும் என்பதற்காகத்தான் அப்போது 20வது குருமாசன்னிதானம் அம்பலவாணன் ஆட்சிக் காலத்தில் கொதுமா மூர்த்திகள், நாதஸ்வர சக்கரவர்த்தி ராஜரத்தினம் ஆகியோர் டெல்லிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது தங்கச் செங்கோலை நேருவிற்கு கொடுத்தனர்.

இந்த செங்கோலானது 28 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிறுவப்பட உள்ளது. அருங்காட்சியகத்தில் சுமார் 75 ஆண்டுக்காலமாக உறங்கிக் கொண்டு இருந்த செங்கோலை பாராளுமன்றத்தில் வைப்பதற்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் பிரதமர் நரேந்திர மோடிக்கு திருவாவடுதுறை ஆதீனம் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். பழைய நடைமுறைகளைப் பின்பற்றி செங்கோல் வைக்கப்படுமா என்பதை பற்றி எதுவும் தெரியவில்லை. நாளைக்கு நடைபெறுவதைஇன்றைக்கு சொல்ல முடியாது. ஆங்கிலேயர் காலத்தில் இருந்து அதன் பின்பு தான் 1947 இல் சுதந்திரம் அடைந்தோம். அதன் நினைவாகத்தான் செங்கோல் வழங்கப்பட்டது. செங்கோலை தர்ம தேவதையாக வழிபட்டு ஆட்சி நடத்தப்படவேண்டும். நேர்மையாக ஆட்சி நடத்த வேண்டும் என்பதற்கு தான் இந்த செங்கோல் நாடாளுமன்றத்தில்வைக்கப்பட இருக்கிறது" எனத்தெரிவித்திருந்தார்.

central vista opening ceremony thiruvavaduthurai adheenam reached delhi special flight

இந்நிலையில் நாளை நடைபெற உள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் திறப்பு விழாவில் கலந்து கொள்ள திருவாடுவதுறைஆதீனம் இன்று டெல்லி சென்றடைந்தார். தனி விமானம் மூலம் டெல்லி விமான நிலையம் சென்றுஅங்கிருந்து கார் மூலமாக பாராளுமன்றத்தை அடைந்தார். அப்போது திருவாடுவதுறை ஆதீனம் சார்பாகஅங்கு தயாராக இருந்தவர்கள் திருவாடுவதுறைஆதீனத்தைவரவேற்றனர். விமானம் மூலம் டெல்லி செல்வதற்கானஏற்பாடுகளை மத்திய அரசு செய்து இருந்தது.இதே போன்று தருமபுரம் ஆதீனமும்டெல்லி சென்றடைந்தார்.

Delhi flight Parliament
இதையும் படியுங்கள்
Subscribe