இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், கேரளாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் கரோனாதொற்று அதிகரித்துவருகிறது. இந்தியாவிலயேதற்போது கேரளாவில்தான் அதிக கரோனாபாதிப்புகள் பதிவாகி வருகிறது.
இதனையடுத்துகரோனாவைகட்டுப்படுத்த மாநில அரசு எடுத்து வரும் முயற்சிக்கு உதவும் வகையில்,தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குநர் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு கேரளாவிற்குஅனுப்பவுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில்தற்போது கேரளா விரைந்துள்ளதேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குநர் தலைமையிலான மத்திய குழு, முதற்கட்டமாகஆலப்புழா மாவட்ட ஆட்சியர் அலுவலகதிற்கு வருகை தந்து, அம்மாவட்டத்தில் எடுக்கப்படவேண்டிய கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து விவாதித்துள்ளனர்.