corona

Advertisment

நாடு முழுவதும் நாளுக்கு நாள் கரோனாதொற்றுஅதிகரித்து வரும் நிலையில்முன்களப் பணியாளர்கள்,காவலர்கள், மருத்துவர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டவர்களுக்கும் கரோனாஉறுதி செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் அரசியல் பிரபலங்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ரயில்வே துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்கடிகரோனாவால் உயிரிழந்துள்ளார். கரோனா உறுதி செய்யப்பட்டு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில்தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில்(65 வயது) அவர் உயிரிழந்துள்ளார். பெலகாவிதொகுதியில் இருந்து நான்கு முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சுரேஷ்அங்கடிஎன்பது குறிப்பிடத்தக்கது.