Advertisment

மத்திய அமைச்சரவை மாற்றம்!

Central Ministry change

Advertisment

மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கரில் நடைபெற்ற சட்டப்பேரவைத்தேர்தல்களில் மத்திய அமைச்சர்களான நரேந்திர சிங் தோமர், ப்ரஹலாத் சிங் படேல், ரேனுகா சிங் ஆகியோர் போட்டியிட்டு வென்றனர். அதனைத்தொடர்ந்து தங்களது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு கடிதம் எழுதி இருந்தனர்.

இதனையடுத்து நரேந்திர சிங் தோமர், ப்ரஹலாத் சிங் படேல், ரேனுகா சிங் ஆகியோரின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் ராஜினாமாவை அடுத்து மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டாவுக்கு வேளாண்துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. உணவு பதப்படுத்தும் துறை இணை அமைச்சராக ஷோபா கரந்தலாஜே நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திர சேகர் ஜல்சக்தித் துறையை கூடுதலாக கவனிப்பார். மத்திய இணை அமைச்சர் பாரதி பவார் பழங்குடியினர் விவகாரத்துறையை கூடுதலாக கவனிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ministry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe