Skip to main content

மத்திய அமைச்சரவை மாற்றம்!

Published on 07/12/2023 | Edited on 07/12/2023
Central Ministry change

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் மத்திய அமைச்சர்களான நரேந்திர சிங் தோமர், ப்ரஹலாத் சிங் படேல், ரேனுகா சிங் ஆகியோர் போட்டியிட்டு வென்றனர். அதனைத் தொடர்ந்து தங்களது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு கடிதம் எழுதி இருந்தனர்.

இதனையடுத்து நரேந்திர சிங் தோமர், ப்ரஹலாத் சிங் படேல், ரேனுகா சிங் ஆகியோரின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் ராஜினாமாவை அடுத்து மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டாவுக்கு வேளாண்துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. உணவு பதப்படுத்தும் துறை இணை அமைச்சராக ஷோபா கரந்தலாஜே நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திர சேகர் ஜல்சக்தித் துறையை கூடுதலாக கவனிப்பார். மத்திய இணை அமைச்சர் பாரதி பவார் பழங்குடியினர் விவகாரத்துறையை கூடுதலாக கவனிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தனிநபர் பெயரில் அதிகமான சிம் கார்டு வைத்திருந்தால் சிறை! - புதிய சட்டம் அமல்

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
 Implementation of new law on Jail if have too many SIM cards

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், பல சிம் கார்டுகளை வைத்திருப்பது நடைமுறையாகிவிட்டது. தனிநபர்கள் தங்கள் பெயரில் பல சிம் கார்டுகளை வைத்திருப்பதால் சட்ட மற்றும் நிதி சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது. மேலும், நாட்டில் நடக்கும் குற்றச்செயல் பலவற்றுக்கு தொலைப்பேசி சாதனமே என்று கூறப்படுகிறது. இதனால், தொலைப்பேசி பயன்பாட்டில் புதிய நெறிமுறைகளை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் உருவாக்கியுள்ளது. 

அதன்படி, 2023ஆம் ஆண்டின் தொலைத்தொடர்பு சட்டத்தின்படி, கடுமையாக விதிமுறைகளை உருவாக்கியுள்ளது. அதில், ஒரு தனிநபர் 9 சிம் கார்டுகள் வரை வைத்திருக்கலாம். ஆனால், அவர் 10 சிம் கார்டுகளையோ அல்லது அதற்கு மேலோ வைத்திருந்தாலோ அவர்களுக்கு ரூ50,000 முதல் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பதற்றமான மாநிலங்களான ஜம்மு & காஷ்மீர், அசாம் போன்ற மாநிலங்களில் ஒருவர் அதிகபட்சமாக 6 சிம் கார்டுகள் வரை தான் வைத்திருக்க முடியும் என்று தெரிவித்துள்ளது. 

வரையறுக்கப்பட்ட விதிமுறைகளை முதல் முறையாக மீறினால், அவர்களுக்கு ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும். அந்தக் குற்றம் தொடருமானால் அதிகபட்சமாக அவர்களுக்கு ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். இந்தச் சட்டத்தில் மேலும் பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன. சிம் கார்டுகளைப் பெறுவதற்கு வேறு ஒரு பெயரை யாராவது மோசடியாகப் பயன்படுத்தினால், அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளது. மேலும், பயனரின் அனுமதியின்றி வணிகச் செய்திகளை அனுப்பினால், அந்தத் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் போன்ற பல விதிமுறைகளை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
 

Next Story

ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு மத்திய அமைச்சர் ஆறுதல்!

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
Union Minister consoles Armstrong's wife

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி (05.07.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 11 பேர் சரணடைந்த நிலையில் 11 பேரும் கைது செய்யப்பட்டு போலீஸ் கஸ்டடி காவலில் விசாரணைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இத்தகைய பரபரப்பான சூழலில் தான் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் போலீசார் பிடியில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்தப் போது கடந்த 14 ஆம் தேதி (14.07.2024) அதிகாலையில் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். அதே சமயம் இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சியினர் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். அதோடு தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து கேள்விகளையும் எதிர்க்கட்சியினர் எழுப்பினர்.

இதற்கிடையே கடந்த 9 ஆம் தேதி (09.07.2024) பெரம்பூர் அயனாவரம் பகுதியில் அமைந்துள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்குச் சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிஆகியோர் அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

இந்நிலையில் மறைந்த ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினர் மற்றும் அவரது மனைவி பொற்கொடியை மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே இன்று (17.04.2024) சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது ஆம்ஸ்ட்ராங் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்த சந்திப்பின் போது ம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினரிடம் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, ‘கொலை சம்பவம் குறித்த  விசாரணைக்கு மத்திய அரசு உதவியாக இருக்கும்.’ எனத் தெரிவித்தார்.