DMK MP Wilson's request! Central Minister who took action!

Advertisment

இந்தியா முழுவதும் நெடுஞ்சாலைகளில் 1000-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் செயல்பாட்டில் இருந்து வருகின்றன. இதில் சுமார் 700 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றன. இந்த சுங்கச்சாவடிகள் மூலம் வசூலிக்கப்படும் கட்டணத்தைதேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் உயர்த்தி வருகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்களும், வணிகர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடி கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று திமுக ராஜ்யசபா எம்.பி. வில்சன்மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைத்தார். இதனையடுத்து வில்சனுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார் மத்திய அமைச்சர்.

DMK MP Wilson's request! Central Minister who took action!

Advertisment

இதுகுறித்து திமுக எம்.பி வில்சன் தனது ட்விட்டர் பதிவில், “நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக வாகனப்பதிவின் போதே ஒரு சிறிய கட்டணமாக வசூலிக்க வலியுறுத்தி ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியிடம் நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்தேன். அதற்குதற்போதுபதிலளித்திருக்கும்ஒன்றியஅமைச்சர் 'நெடுஞ்சாலைகளில் வாகனங்களுக்கு வசூலிக்கப்படும் சுங்கச்சாவடி கட்டணமானதுபொது நிதியுதவி திட்டங்களில்40% வரை குறைக்க முடிவெடுத்துள்ளதாகத்தெரிவித்துள்ளார்.

சாலைப்பயனாளர்களின் சுமையைக் குறைக்க உதவிடும் இந்த முடிவிற்காக ஒன்றியஅமைச்சர் நிதின் கட்கரிக்கு நன்றியினைதெரிவித்துக்கொள்கிறேன்.எப்படியிருந்தாலும் விரைவில் சுங்கச்சாவடிகளை முழுவதுமாக அகற்றிவிட்டு வாகனப்பதிவின் பொழுதே ஒருமுறைசிறிய கட்டணமாக வசூலித்துக் கொள்ள ஆவண செய்யுமாறு ஒன்றிய அமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் திமுக எம்.பி. வில்சன்.