
இந்தியாவில் கரோனாஇரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் தினசரி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்துதடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்த பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அதேநேரத்தில்நாளை (14.04.2021) மாநில/ யூனியன் பிரதேச ஆளுநர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தவுள்ளார் என மத்திய அரசின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தநிலையில், மத்திய தொழிலாளர் நலத்துறை இணையமைச்சர்சந்தோஷ் கங்வாருக்குகரோனாதொற்று உறுதியாகியுள்ளது. இதனைதனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், தனக்கு கரோனாஅறிகுறி எதுவுமில்லை எனவும்கூறியுள்ளார். தன்னோடு தொடர்பில் இருந்தவர்கள், கரோனாபாதுகாப்பு விதிகளைக் கடைபிடிக்குமாறுஅறிவுறுத்தியுள்ள அவர், அனைவரும் சேர்ந்து இந்தப் பெருந்தொற்றை வெல்வோம் எனக் கூறியுள்ளார்.
Follow Us