Advertisment

"உயர்கல்வியில் இந்தியைத் திணிக்க முயலும் மத்திய அரசு" - கேரள முதல்வர் கண்டனம் 

publive-image

Advertisment

மத்திய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கைக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ள கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், இந்த முயற்சிகளை கைவிடுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் பினராயி விஜயன், உயர்கல்வியில் இந்தியைத் திணிக்கும் நடவடிக்கைள், இந்தியாவின் பன்முகத்தன்மையான வேற்றுமையில் ஒற்றுமை என்ற சிறப்பம்சத்தின் மீதான தாக்குதல் என்று குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலான இந்தியர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பு விஷயங்களில் இந்தி திணிப்பு முயற்சிகள், பாதகமாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கூட்டாட்சியின் தத்துவத்தை அவமதிக்கும் இந்த நடவடிக்கையை ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.

Kerala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe