Advertisment

ஏழு வருடங்களில் 700க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் தற்கொலை - மத்திய அரசு அதிர்ச்சி தகவல்!

indian defense forces

இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின்இரண்டாவது அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களின்கேள்விக்கு, துறை சார்ந்த அமைச்சர்கள் வாய்மொழியாகவோ, எழுத்துப்பூர்வமாகவோபதிலளித்து வருகின்றனர்.

Advertisment

இந்தநிலையில்நாடாளுமன்ற மாநிலங்களவையில், இந்திய பாதுகாப்பு படையினரின் தற்கொலை குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இதுவரை 787 இந்திய பாதுகாப்பு படையினர் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார். இந்திய இராணுவத்தை சேர்ந்த 591 பேரும், கப்பற்படையை சேர்ந்த 36 பேரும். விமானப்படையை சேர்ந்த 160 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகமத்திய இணையமைச்சர் கூறியுள்ளார்.

Advertisment

மேலும் 2014 முதல் தற்போது வரை பாதுகாப்பு படை வீரர்கள், சகவீரர்களைசுட்டு கொல்லும் சம்பவங்கள் 18 முறை நடைபெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ள அவர், பாதுகாப்பு படை, தங்கள் வீரர்களின்மனநல பிரச்னையைகையாளவும், தற்கொலை மற்றும் சக வீரர்களை சுட்டுக்கொள்ளும்சம்பவத்தை தடுக்கவும் நெறிமுறைகளை வகுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

Ministry of Defense indian army
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe