
கனடாபிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும், இந்தியப் பிரதமர் மோடியும்சமீபத்தில் தொலைப்பேசி மூலமாகஉரையாடினார். அதன்பிறகு, தொலைப்பேசி உரையாடல்கள் குறித்துஇருநாடுகளும் தனித்தனியாக அறிக்கை வெளியிட்டன.
கனடாவெளியிட்டஅறிக்கையில், இரு நாட்டுத் தலைவர்களும் அண்மைக்காலப் போராட்டங்கள் குறித்துப் பேசியதாகக் கூறப்பட்டிருந்தது. இந்தியாவின் அறிக்கையில் அதுபற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஏற்கனவே விவசாயப் போராட்டங்கள் தொடர்பாக ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், பிரதமர் மோடியோடுஅவர் விவசாயப் போராட்டங்கள் குறித்துபேசியதைமத்திய அரசு மறைக்கிறதா எனச் சந்தேகம் எழுந்தது. சமூகவலைதளங்களில் இதுகுறித்து விவாதமும் நடந்தது.
இந்தநிலையில் வேளாண்போராட்டங்கள் தொடர்பாகபிரதமர் மோடியுடன் ஜஸ்டின் ட்ரூடோஎன்ன பேசினார்என்பதை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இன்று வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், "வேளாண் போராட்டம் குறித்து ஜஸ்டின் ட்ரூடோ, பேச்சுவார்த்தை என்ற பாதையைத் தேர்ந்தெடுத்த இந்திய அரசின் முயற்சிகள், ஜனநாயகத்திற்கு ஏற்றதாகும் எனத் தெரிவித்தார். கனடாவில் உள்ள இந்திய உயர் அதிகாரிகள் மற்றும் அவர்களின் வளாகங்களைப் பாதுகாப்பது தனது அரசாங்கத்தின் கடமை என்பதை உறுதிசெய்தார்" எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)