Advertisment

விவசாயிகள் போராட்டம்; சர்வதேச பிரபலங்களுக்கு மத்திய அரசு பதில்!

press release

Advertisment

மத்திய அரசின்வேளாண்சட்டங்களுக்கு எதிராகபோராடி வரும் விவசாயிகள், குடியரசு தினத்தன்றுநடத்தியட்ராக்டர்பேரணியில்வன்முறை வெடித்தது. இதன்பிறகு விவசாயிகள் முகாமிட்டுள்ள சிங்குஎல்லையிலும் கலவரம்வெடித்தது.

இந்த வன்முறை சம்பவங்களால், விவசாயிகள் போராடி வரும் டெல்லியின்சிங்கு, காசிபூர் மற்றும் டிக்ரிஎல்லைகளில் இணையதள வசதி தாற்காலிமாக முடக்கப்பட்டது. மேலும் டெல்லியில் விவசாயிகள் கூடுவதைத் தடுக்க, எல்லைகளில் கான்க்ரீட் தடுப்புகள், முள்வேலிகள் உள்ளிட்ட தடுப்புகளை டெல்லி காவல்துறையினர் ஏற்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பகுதிகளில் இணையதள சேவைமுடக்கப்பட்ட செய்தியைதனதுட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த,சர்வதேச பாப் பாடகர் ரிஹானா, "நாம் ஏன் இதுபற்றிபேசுவதில்லை" எனகேள்வியெழுப்பியிருந்தார். அதேபோல், இதேசெய்தியைதனதுட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த கிரெட்டாதன்பெர்க், “விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகநிற்கிறோம்” எனபதிவிட்டுள்ளார். இவர் சுற்றுசூழல் விவகாரத்தில் முன்னாள் அமெரிக்கஅதிபர் ட்ரம்போடுகடுமையாக மோதியவர் ஆவர். இதேபோல்மியாகலீஃபா, "என்ன மனிதஉரிமை மீறல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது?டெல்லியைச் சுற்றி இணைய சேவையை ரத்து செய்துவிட்டார்கள்?!" எனத் தெரிவித்திருந்தார்.

Advertisment

சர்வதேச பிரபலங்களின் இந்தப் பதிவுகளால், விவசாயிகளின் போராட்டம் சர்வதேச கவனம்பெரும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து பிரபலங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், மத்திய அரசு அறிக்கை ஒன்றைவெளியிட்டுள்ளது. அதில், ‘இந்தியாவில்குறைந்தஅளவிலானவிவசாயிகளுக்கே, வேளாண் சட்டங்கள் குறித்துமாற்றுக்கருத்து உள்ளது. போராட்டக்காரர்களின் உணர்வுகளை மதித்து, மத்திய அரசு தொடர் பேச்சுவார்த்தைகள் நடத்தியது. வேளாண்சட்டங்களை நிறுத்தி வைக்கவும்தயாராகவுள்ளது. தனிப்பட்ட நலன் சார்ந்தகுழுக்கள், தங்களதுதிட்டங்களைப் போராட்டங்களில் திணித்து, அவற்றைதடம்புரள செய்ய முயற்சிப்பது துரதிருஷ்டவசமானது. இதுவே ஜனவரி26 இல்காணப்பட்டது.பரபரப்பான சமூக ஊடக ஹேஷ்டேக்குகள் மற்றும் கருத்துகளைப் பிரபலங்களும், மற்றவர்களும் நாடும்போதுஅது துல்லியமானதாகவோ, பொறுப்பான ஒன்றாகவோ இல்லை’ எனக் கூறியுள்ளது.

மேலும், ‘இதுபோன்றவிவகாரங்களில் கருத்துதெரிவிக்கும்முன்னர், உண்மைகளைஉறுதிசெய்து கொள்ளுமாறும், விவகாரங்கள் குறித்த சரியான புரிதலைக் கொண்டிருக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்’ எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.

farm bill Farmers greta thunberg mia khalifa
இதையும் படியுங்கள்
Subscribe