Advertisment

ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூபாய் 1,13,865  கோடி ஜிஎஸ்டி வரி வசூல்!

ஏப்ரல் மாதத்தில் வசூலான ஜிஎஸ்டி வரி வசூல் குறித்த விவரங்களை மத்திய நிதித்துறை அமைச்சர் வெளியிட்டார். இதில் கடந்த மார்ச் மாத ஜிஎஸ்டி வரியை (மார்ச் - ரூபாய் 1,06,577 கோடி ) காட்டிலும் 6.84% உயர்ந்து ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வரி வசூல் சுமார் ரூபாய் 1,13,865 கோடி வசூல் ஆனது என மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.இந்த ஜிஎஸ்டி வரி வசூல் தொகையானது கடந்த மாதங்களை காட்டிலும் மிக அதிகம் என தெரிவித்துள்ளது.

Advertisment

gst

மேலும் ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி வரி வசூல் அதிகமாகி கொண்டே இருக்கிறது என தெரிவித்தார். அதே போல் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரூபாய் 1,03,459 கோடி வசூலானது. இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் காட்டிலும் தற்போது ஏப்ரல் மாதம் ஜிஎஸ்டி வரி வசூல் சுமார் 10.05 % உயர்ந்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் வசூலான மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் தொகையை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டது.

Central Goods and Services Tax (CGST) - Rs. 21,163 கோடி.

State Goods and Services Tax (SGST) - Rs.28,801 கோடி.

Integrated Goods and Services Tax (IGST) - Rs. 54,733 கோடி.

Cess worth : Rs.9,168 கோடி

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்த வரி வசூலில் ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசுக்கு ரூபாய் 47,533 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அதே போல் மாநில அரசுகளுக்கு ரூபாய் 50,776 கோடி ஜிஎஸ்டி வரி மூலம் வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 2018-2109 நிதி ஆண்டில் சராசரி மாத ஜிஎஸ்டி வரி வசூல் ரூபாய் 98,114 கோடியாக இருந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வரி வசூல் சுமார் 16.05% அதிகரித்துள்ளது.

Central Government GST India Recovery tax
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe