இந்தியாவில் கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்த கரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் மேலாக பதிவாகிவரும் நிலையில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றும்படி அந்தக் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.