மத்திய அரசுப் பணிகளில் உதவி இயக்குனர் மற்றும் இயக்குனர் ரேங்கில் பணிபுரிய 400 பேரை தனியார் நிறுவனங்களில் இருந்து தேர்வுசெய்து நியமிக்க மோடி அரசு முடிவு செய்திருக்கிறது.

Advertisment

modi

சென்ட்ரல் ஸ்டாஃபிங் ஸ்கீமிற்கு தேவைப்படும்650 பதவிகளில், 400 பதவிகளுக்கு தனியார் துறைகளில் இருந்து ஆட்களை தேர்வுசெய்து நியமிக்க திட்டமிட்டிருப்பதாக அலுவலர் நலத்துறை தெரிவித்துள்ளது.

இதற்காக 2009 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மத்திய அரசு செயலக சேவை விதிகளில் திருத்தம் செய்யவும் மோடி அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படி தேர்வு செய்யப்படுகிறவர்கள் பெரும்பாலும் ஆர்.எஸ்.எஸ். தொடர்புடையவர்களாக இருப்பார்கள் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.