Advertisment

ஆன்லைன் விளையாட்டிற்கான நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

central government has issued  code conduct for online gaming

Advertisment

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தினால்இதுவரை 38 பேர்உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, தமிழக அரசு ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்த நிலையில், அவர் ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.

இந்த நிலையில், ஆன்லைன் விளையாட்டு தொடர்பாக வரையறுக்கப்பட்ட நெறிமுறைகளை மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், "ஆன்லைன் விளையாட்டு நிறுவனத்தின் இணைய முகவரியைவிளையாடுபவர்கள் சரிபார்க்கும் வகையில் அமைத்தல்அவசியம்.பதிவு செய்யப்பட உறுப்பினர்களாக உள்ள நிறுவனங்கள் ஆன்லைன் விளையாட்டுகளைபதிவு செய்யலாம். ஆன்லைன் விளையாட்டுத்தளங்கள் இந்தியாவின் சட்டங்கள் மற்றும் விதிகளைப் பின்பற்றிசெயல்பட வேண்டும்.

ஆன்லைன் விளையாட்டில் பங்கேற்போர் இந்திய சட்ட விதிகளைமீறி ஆன்லைன் விளையாட்டுகளைஹோஸ்ட் செய்யவோவீடியோக்களைவெளியிடவோமற்றவர்களுக்கு பகிரவோகூடாது என்பதை அந்தந்த இடைத்தரகர்கள்கண்காணிக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளிலும்பதிவு முத்திரையைநிறுவனங்கள் காண்பிக்க வேண்டும். வைப்புத்தொகையைத்திரும்பப்பெறக்கூடிய வசதியை ஏற்படுத்தியிருக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe