ஃபோனி புயல் அதிதீவிர புயலாக மாறி வரும் நிலையில் ஒடிஷா மாநிலத்தில் நாளையோ அல்லது நாளை மறுநாளோ கரையை கடக்க உள்ளது. இதற்கிடையே மாநில அரசுகள முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசு தமிழகம் , ஒடிஷா , மேற்கு வங்காளம் , ஆந்திரப்பிரதேசம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களுக்கு ரூபாய் 1086 கோடி நிதியை வழங்கியது.

Advertisment

central government

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

மேலும் மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் இந்த நிதியை பயன்படுத்தி உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் , தேசிய பேரிடர் மீட்பு படைகள் மற்றும் தன்னார்வலர்கள் , ராணுவ வீரர் உள்ளிட்டோர்களை தயார் நிலையில் வைக்கவும் , புயல் குறித்து விவரங்களை அவ்வப்போது மாநில அரசுகள் மத்திய உள்துறைக்கு உடனடியாக அனுப்ப அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையே ஒடிஷா மாநிலத்தில் ஃபோனி புயல் கரையை கடக்கும் போது அதிக சேதங்களை ஏற்படுத்தும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் மாநில அரசுகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.