நாட்டில் அமலில் இருக்கும் அனைத்துவிதமான கரோனா கட்டுப்பாடுகளையும் இந்த மாதம் 31ஆம் தேதியோடு முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
அனைத்து மாநில அரசுகளுக்கும் எழுதியுள்ள கடிதத்தில் உள்துறை செயலாளர் அஜய் பல்லா இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். கட்டுப்பாடுகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும் முறையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கரோனா பாதிப்பின் விகிதம் குறைந்துவருவதையடுத்து, மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.