மத்திய அரசின்புதிய வேளாண்சட்டங்களுக்கு எதிராகவிவசாயிகளின்போராட்டம் 33 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.மத்திய அரசுடன்இதற்கு முன்பு நடைபெற்றஐந்து கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில்முடிவடைந்தன.
அதன்பிறகு விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும்பேச்சுவார்த்தை நடைபெறாதநிலையில், மத்திய அரசின்கோரிக்கையைஏற்று நாளை (29.12.20) பேச்சுவார்தைக்குத்தயார் எனவிவசாய அமைப்புகள் அறிவித்திருந்தன.
ஆனால், மத்திய அரசு நாளை மறுநாள் (30.12.20) பேச்சுவார்த்தைக்கு வருமாறுவிவசாய அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.