Advertisment

இராமர் சென்ற பாதையை கட்டமைக்கும் மத்திய அரசு!

ram

இந்துமத இதிகாசமான இராமாயணத்தின்படி, இராமர்தனது தந்தையின் கட்டளையை ஏற்று, தனது மனைவி மற்றும் தம்பியோடுவனவாசம் மேற்கொள்வார். அவ்வாறு வனவாசம் செல்கையில் இராமர், அயோத்தியிலிருந்து முதலில் சித்திரக்கூடம் என்ற பகுதிக்குச் சென்றதாக நம்பப்படுகிறது. இந்த சித்திரக்கூடமும்உத்தரப்பிரதேச மாநிலத்தில்தான் அமைந்துள்ளது.

Advertisment

இந்தநிலையில் இராமர், அயோத்தியிலிருந்து சித்திரக்கூடம் சென்றதாகக் கூறப்படும் வழியைக் கட்டமைக்க, மத்தியசாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. மேலும் இந்தத் திட்டத்திற்கு ‘ராம் வான் கமன் மார்க்’ என பெயரிடப்பட்டுள்ளது.

Advertisment

இந்த சாலை 210 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படவுள்ளது. அயோத்தியை, பைசாபாத், சுல்தான்பூர், பிரதாப்கர், ஜெத்வாரா, ஷ்ரிங்வர்பூர், மஞ்சன்பூர் மற்றும் ராஜபூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக, சித்திரக்கூடத்தோடு இணைக்கும் வகையில் இந்த சாலை உருவாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ram temple Road uttarpradesh ramar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe