இந்தியாவிலுள்ள விமானப் படை, கடற்படை ஆகியவற்றில் பெண்கள் குறுகிய காலம் மட்டுமே பணி அமர்த்தப்பட்டு வருகின்றனர். இதனை எதிர்த்து கடற்படை பெண் அதிகாரிகள் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த 2010ஆம் ஆண்டு விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், கடற்படையில் பெண்களை முழுமையான சேவையில் பணியமர்த்துங்கள் என்று உத்தரவிட்டது.

Advertisment

rahul gandhi

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்த உத்தரவை எதிர்த்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தது. இது தொடர்பான விசாரணையின்போது, ராணுவத்தில் கமாண்டர் போன்ற பதவிகளுக்கு பெண்களை ஏன் தேர்வு செய்யக் கூடாது என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.

அதற்கு மத்திய பாதுகாப்புத்துறை சார்பில் அளித்த அறிக்கையில், “ஆண்களை ஒப்பிடும்போது, பெண்களின் உடல் வலிமை மிகவும் குறைவு. அதேபோல், மகப்பேறு காலங்களில் அவர்கள் நீண்ட விடுமுறை எடுக்க வேண்டியிருக்கும். குழந்தைகளைப் பராமரிப்பது, கணவர்களின் தேவைகளைக் கவனிப்பது உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகள் அவர்களுக்கு உள்ளன. இதனால், ராணுவத்தில் கமாண்டர்களாகப் பணிபுரிவது பெண்களுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும்.

Advertisment

இது ஒருபுறம் இருக்க, ராணுவத்தில் பணிபுரியும் ஆண்கள், உடல் வலிமையில் குன்றிய பெண் அதிகாரிகளின் உத்தரவுகளை ஏற்று நடப்பதும் கேள்விக்குறிதான். எனவே, இதுபோன்ற காரணங்களால் ராணுவக் கமாண்டர்களாக பெண்களை பணியமர்த்துவது அரசுக்குச் சவாலான விஷயம்” என்று தெரிவித்தது.

மத்திய அரசின் இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மூன்று மாதத்திற்குள் பிறப்பிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் மத்திய அரசின் இந்த வாதத்தை விமர்சிக்கும் வகையில் ராகுல் காந்தி, “ராணுவ பெண் அதிகாரிகள் தலைமை பதவி வகிக்கவோ, நிரந்தர பணி வகிக்கவோ தகுதியற்றவர்கள் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதிட்டுள்ளது. ஆண்களை விட அவர்களை தாழ்ந்தவர்கள் என்று சொல்கிறது. இதன்மூலம் பெண்களை அவமரியாதை செய்துள்ளது. இருப்பினும், இதை எதிர்த்து நின்று, மத்திய அரசு செய்வது தவறு என்று நிரூபித்த பெண்களை நான் பாராட்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.