இந்தியா முழுவதும் கரோனா தடுப்பூசிகளை மக்களுக்குச்செலுத்தும் பணிகள், கடந்த 16 ஆம் தேதியிலிருந்துநடைபெற்று வருகிறது. இந்த தடுப்பூசி செலுத்தும் பணிகளில், சுகாதாரப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
கரோனாதடுப்பூசிகள் இரண்டு முறை செலுத்தப்படும். இரண்டு டோஸ்கள் செலுத்தப்பட்டால்தான் கரோனாவிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும் எனமருத்துவ வல்லுநர்கள் கூறிவருகிறார்கள். இந்தநிலையில் இந்தியாவில்சுகாதாரப் பணியாளர்களுக்கு, இரண்டாம்டோஸ் செலுத்தும் பணிகள்தொடங்கும்தேதியைநிதி ஆயோக்அறிவித்துள்ளது.
இதுகுறித்து நிதி ஆயோக், "கரோனாதடுப்பூசியின் இரண்டாவது டோஸ் பிப்ரவரி 13 முதல் சுகாதாரப் பணியாளர்களுக்கு செலுத்தப்படும். இதுவரை அவர்களுக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் மட்டுமேசெலுத்தப்பட்டுள்ளது"எனத் தெரிவித்துள்ளது.