Central government announced Padma Bhushan award for actor Ajith Kumar

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2025ஆம் ஆண்டுக்கான இந்தாண்டு 6 பேருக்கு பத்ம விபூஷன் விருதுகளும், 19 பேருக்கு பத்ம பூஷன் விருதுகளும், 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட உள்ளன. இதில் தற்போது 10 பேருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்படவுள்ளது. இலக்கியம், கலை உள்ளிட்ட சேவைகளுக்காக தமிழகத்தில் இருந்து மொத்தம் 10 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஸ்வின், சமையல் கலைஞர் தாமு, தாமோதரன், தட்சிணாமூர்த்தி, ராதாகிருஷ்ணன், தேவசேனாதிபதி ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

அதே போல் கலைத்துறையில்lநடிகர் அஜித் குமார், தெலுங்கு நடிகரும் தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏவுமான பாலகிருஷ்ணன், நடிகை சோபனா சந்திரகுமார், தொழிலதிபர் நல்லி குப்புசாமி, தினமலர் லட்சுமிபதி ராம சுப்பையார் ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 7 பேருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.